
இந்த பக்கம் ஓபிஎஸ்!! அந்த பக்கம் பிரேமலதா!! ஒரே நாளில் அடுத்தடுத்த சந்திப்பு!! ஸ்டன்னாக்கிய திமுக..
முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக உடற்பயிற்சிக்காக இன்று காலை அடையார் பூங்காவுக்குச் சென்றார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அங்கு நடைப்பயிற்சிக்காக வந்துள்ளார். இருவரும் சந்தித்துக்கொண்டது குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துகளை உருவாக்கியுள்ளது.