தவெகவினர் ஆபாச பதிவு....விஜய் மீது புகார் அளித்த திமுகவை சேர்ந்த வைஷ்ணவி ! பரபரப்பு பேட்டி

Share this Video

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில் தவெகவில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் கண்டன, அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன் என கூறினார். நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுவதாக தெரிவித்தார்.

Related Video