இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் திமுக! கனிமொழிக்கு அமித்ஷா காட்டமான பதிலடி!
இலங்கை அகதிகள் விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள், தங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பேசினார். மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய அவர், திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அமித்ஷா தெரிவித்தார்.