
திமுக ஆட்சியில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது...பெண்களுக்கு பாதுகாப்பில்லை ! பிரேமலதா பேட்டி !
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியானது காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நிச்சயம் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பளிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக ஆட்சியில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது நூற்றுக்கு 50 50 மதிப்பெண் பதில் அளித்தார். ஆணவக் கொலைக்கு முக்கிய காரணம் சாதிவெறி இது ஆட்சியாளர்களின் விஷயம் அல்ல ஆணவ கொலை ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.