
மத்திய அரசின் சாதனைகளை சொல்ல முடியாமல் மக்களை குழப்புகிறது திமுக அரசு ! அண்ணாமலை பேட்டி !
எந்த நிதியும் மத்திய அரசினுடையது இல்லை , மாநில அரசு நங்கள் தான் அதிகமாக கொடுக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார் . மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேரும்பொழுது பெரும்பாலான திட்டங்களில் மாநில அரசு 60%-மும் மத்திய அரசு 40%-மும் இருக்கிறது . நிறைய திட்டங்கள் ஐம்பது ஐம்பது சதவீதங்கள் இருக்கிறது . நிறைய திட்டங்கள் மத்திய அரசு மட்டுமே 100% இருக்கிறது . எல்லாம் இணைந்து இருக்க வேண்டும் என்று சொல்லுகிற முதலமைச்சர் ஏன் மத்திய அரசினுடைய 100% திட்டங்களை சொல்லாமல் இருக்கிறார்கள் . இதை பற்றி பேசாமல் ...ஒரு நான்கு ஐந்து திட்டங்களை மட்டும் எடுத்து ..மத்திய அரசு கொஞ்சம் கொடுக்கிறார்கள் . நாங்கள் நிறைய கொடுக்கிறோம் என்று ஏன் இதில் அரசியல் செய்ய முதலமைச்சர் விரும்புகின்றார் என்று நாங்கள் கேட்கிறோம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேட்டி .