
மதுரை வந்த தவெக தலைவர் விஜய் ஏராளமான கார்கள் சூழ தொண்டர்கள் வரவேற்பு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருவதை அடுத்து காலை முதலே மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த ரசிகர்கள்.மதுரை விமான நிலையத்தில் இருந்து தவெகவினரை பாதுகாப்பாக போலீசார் வெளியேற்றினர். அதனால் விமான நிலைய சாலையில் இருபுறத்திலும் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனம் மூலம் விமான நிலைய சாலையில் இருபுறமும் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை வாகனத்தில் இருந்தவாறு பார்த்துக் கொண்டே வரவேற்பு இடத்திற்கு செல்கிறார் விஜய்.