
திமுக அண்ணா அறிவாலயம் 'ரெட்லைட் ஏரியா'வா? பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம் !
சென்னை அண்ணா அறிவாலயம் பற்றி பேசுகிற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் சென்னை அண்ணாசாலை பக்கமாவது வரட்டும்" என திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்து பேசியதற்கு பதிலாக, அண்ணாமலை இருக்கட்டும்.. நானே வருகிறேன்.. எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைம் குறிங்க..'அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா'வா? என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.