Viral Video : கடனை திருப்பி கேட்டவரை வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்!- பரபரப்பு வீடியோ!!
மணச்சநல்லூர் அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபரை அறிவாள் கொண்டு தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் கணவரது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக நித்தியா இருந்து வருகிறார். அவரது கணவர் வெற்றிச்செல்வன், இவர், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை கேட்க வந்த குணசேகரனை, மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன் அறிவாள் கொண்டு தாக்க முயன்றுள்ளார். தப்பி ஓடியும் விடாமல் துரத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.