
தேர்தலில் சீட்டுக்காக, தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை - திருமாவளவன் பேச்சு
விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் அவர் பின்னால் போகிறார்கள் என பேசுகின்றனர். கட்சியில் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்ததும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புடன் சேர்ந்து சங்கியாக மாறிவிட்டனர். வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்பதே த.வெ.க., - அ.தி.மு.க., கட்சிகளின் நோக்கம்; அதுதான் பா.ஜ.க நோக்கமாக உள்ளது.