
திண்டுக்கல்லில் காது குத்து விழாவில் தாய் மாமன் 10 மாட்டு வண்டி10 டிராக்டர்களில் 1008 தட்டுகள் சீர்
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி காது குத்து விழாவில் தாய்மான்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். தனது கௌரவத்தை காட்டும் வகையில் தாய் மாமன்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளின் மகன், மகள் காது குத்து விழாவில் சிறப்பாக சீர் வரிசை செய்வது என்பது பாரம்பரிய முறையாகும்.அதன்படி திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சந்தோஷ்.இவரது மகன் யுவன் ஸ்ரீஹரி, இவரது காது குத்து விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக 10 மாட்டு வண்டிகள், 10 டிராக்டர்களில் ஒரு வருடத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், அரிசி மூட்டைகள், இனிப்பு வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் பலாப்பழம் என பல வகையான பழ வகைகள், புத்தாடைகள், பணம், தங்கநகைகள் போன்றவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.