
சர்க்கரை நோய்க்கு 'டையா பூஸ்டர்’ எனும் புதிய மருந்து ...மருத்துவர்கள் குழு விளக்கம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ஆரோக்கியா ஹெல்த் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் ஜிங்கா மார்க்கெட்டிங் நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது, டையா பூஸ்டர் எனும் டையாபிடிக்ஸ் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்து சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கக்கூடிய ஒரு உணவு என்று தெரிவிக்கப்பட்டது.