Video: மயிலாடுதுறையில் யானைக்கு பொன்விழா கொண்டாடிய கோவில் நிர்வாகிகள்
மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி திருக்கோவில் முன்னவராக அழைக்கப்படும் அபயாம்பிகை யானை கோவிலுக்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அபயாம்பிகை யானைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொன் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பாள். கடந்த அரை நூற்றாண்டாக மாயூரநாதர் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் முன்னவராக யானை அபயாம்பாள் செல்ல விழா சிறக்கும். யானை அபயாம்பாள் கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு பொன்விழா நடத்தப்பட்டது. இது அதன்படி காலை யானைக்கு கலசபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், இரவு பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. வழியெங்கும் வணிகர்கள் பழங்கள், காய்கறிகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை அபயாம்பிகை யானைக்கு கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.