மிக்ஜாம் புயல்: நிவாரண பொருட்கள் அனுப்பும் பாஜக!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன

First Published Dec 7, 2023, 8:16 PM IST | Last Updated Dec 7, 2023, 8:16 PM IST

தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இருந்து பொருட்கள் பேக் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுகின்றன.

Video Top Stories