முதலை வடிவில் ராட்சத உடும்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வீடியோ உள்ளே..

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலை வடிவில் இருந்த ராட்சத உடும்பை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அங்கிருந்து காட்டிற்குள் சென்றது.

First Published Oct 15, 2022, 10:44 AM IST | Last Updated Oct 15, 2022, 10:44 AM IST

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட கழக பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு அருகே வனப்பகுதி மற்றும் பெரிய நீரோடை உள்ளது.

இந்நிலையில் இன்று குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததாக தகவல் பரவிய நிலையில், மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி சாலைக்கு வந்தனர். ஆனால் வனப்பகுதி சாலையோரம் முதலை வடிவில் பெரிய உடும்பு இருந்தது. இதனை கண்டு கிராம மக்கள், வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க:விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!

மேலும் அப்பகுதி இளைஞர் முதலை வடிவில் இருந்த ராட்சத உடும்பை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே, பெரிய உடும்பு காட்டிற்குள் சென்றது. இது சுமார் 30 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Video Top Stories