குற்றாலம் சீசன் : ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி - பொதுமக்கள் குளிக்க அனுமதி!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய தான் காரணமாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆரம்பித்து கொட்டுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கி அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்றல் காற்றுடன் சாரல் மழை வீசுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.