
பெரிய ஹீரோக்கள் சில கதைகளை பண்ண முடியாத சூழல் இருக்கும் கதைக்களம் தான் முக்கியம் - நடிகர் சூரி
மலையாள சினிமாக்களைப் போல்எதார்த்தமான வாழ்வியல் சார்ந்த படங்கள் இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்காக வந்து கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் இது மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பார்களா என்ற கேள்விக்கு கதை சரியாக இருந்தால் எல்லோரும் லைக் பண்ணுவார்கள். கதைக்களம் தான் முக்கியம். அதே நேரத்தில் பெரிய பெரிய ஹீரோக்கள் சில கதைகளை பண்ண முடியாத சூழல் இருக்கும். அவங்களுக்கான ஒரு படத்துக்கான பட்ஜெட் அவங்களுக்கான ஸ்கேல் பெருசாக இருக்கிறப்போ சில விஷயங்களை அவங்களால் பண்ண முடியாது. ஆடியன்ஸ்க்கு எல்லா விதத்திலும் படம் கொடுக்கணும். ஒரு விதத்தில் மட்டும் கொடுக்க முடியாது. குட்டி பசங்க முதல் பெரிய பெரிய ஆட்கள் வரை ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு கேட்டகரியான சில படம் தேவைப்படுது.