பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்
நீலகிரியில் முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முதியவர்கள் நடனமாடியதை பார்த்து தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமுதா நேற்று வருகை புரிந்துள்ளார். நூறு வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பார்வையிட்டு ஆட்சியர் புத்தாடை வழங்கி சிறப்பித்தார். பின்னர் அனைவரிடமும் ஆசியும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர். இதனை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழுதார்.
இதனைத் தொடர்ந்து முதியவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் இருந்தால் இதுபோன்ற சந்தோசங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு நாங்கள் சுதந்திரமாகவும், எங்கள் விருப்பப்படி சந்தோஷமாக வாழ்கின்றோம் எனறும், எங்களை தேடி ஆட்சியர் வந்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.