முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளார் ! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !

Share this Video

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளார்.திமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் சுமார் 20 கிலோ மீட்டர் ரோடு ஷோ மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.வழிநெடுக நின்றிருந்த மக்களிடம் மனுக்களும் பெறப்பட்டன. பின்னர் மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் அவர் எப்போதெல்லாம் மதுரை செல்கிறாரோ அப்போதெல்லாம் அவரது சகோதரர் மு.க.அழகிரி வீட்டுக்கு செல்வாரா என்ற கேள்வியும் அதையொட்டி விவாதமும் நடைபெறும். இன்று முதல்வர் ஸ்டாலின் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சகோதரர் அழகிரி வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Video