CM Stalin Meets Ilaiyaraaja

Share this Video

இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது என குறிப்பிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை இளையராஜா நிகழ்த்தவுள்ளதாக பெருமிதம் அடைந்துள்ளார்.தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்ததாக கூறியிருக்கும் முதலமைச்சர், சந்திப்பின் போது தான் கைப்பட எழுதிய இசைக்குறிப்புகளை தன்னிடம் காட்டி இளையராஜா மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Video