10ம் வகுப்பில் 437 மார்க் எடுத்து முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவன்… தொலைப்பேசியில் முதல்வர் வாழ்த்து!!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த கைகளையும் இழந்த க்ரித்தி வர்மானின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் உரையாடினார். 

First Published May 20, 2023, 12:07 AM IST | Last Updated May 20, 2023, 12:07 AM IST

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த கைகளையும் இழந்த க்ரித்தி வர்மானின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் உரையாடினார். கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த க்ரித்தி வர்மா, 2 கைகளையும் இழந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் க்ரித்தி வர்மா தாயாரிடம் தொலைப்பேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீங்கள் உதவி கேட்டு உள்ளீர்கள். அரசாங்கம் சார்பாக செய்து கொடுக்கிறோம். மாவட்ட ஆட்சியரை அனுப்புகிறேன். உங்களுக்கு அவர் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்.  உடல்நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.