பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி.. 1 மணிநேரம் பேசியே போதையை தெளியவைத்த அதிகாரி - வைரல் வீடியோ!

Chromepet Police Officer : மது போதையில் வாகனம் ஓட்டி சென்ற நபரை பிடித்து, அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு சுமார் 1 மணிநேரம் அறிவுரை கூறியுள்ளனர்.

Share this Video

வழக்கம் போல இன்று குரோம்பேட்டை அருகே போக்குவரத்து ஆய்வாளர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் செம போதையில் வந்துள்ளார் ஒரு ஆசாமி. அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரை போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த சூழலில் போதையில் இருந்த அந்த நபருடன் பேச துவங்கியுள்ளார் அவர். 

வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களை பற்றி அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம், அவரது போதை முற்றிலும் தெளியும் வரை பேசியுள்ளார் அந்த ஆய்வாளர். ஒரு கட்டத்தில் போதை தெளிந்த அந்த ஆசாமி இனி இப்படி செய்யமாட்டேன் என்று ஆய்வாளரிடம் வாக்கு அளித்துள்ளார். அந்த வீடியோ இப்பொது வைரலாக பரவி வருகின்றது. 

Related Video