Chess Olympiad : கோலாகலமாக வலம் வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி - பிரம்மாண்ட வரவேற்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஜோதி ஒட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தை பேண்டு வாத்தியம், மேல தாளங்கள் முழங்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார் 

First Published Jul 26, 2022, 10:02 PM IST | Last Updated Jul 26, 2022, 10:02 PM IST

இந்தியாவில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்க்கவுள்ளனர் 

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில்   ஜோதி ஒட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தை பேண்டு வாத்தியம், மேல தாளங்கள் முழங்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார் 

இந்த ஜோதி ஒட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி மேட்டு தெரு, மூங்கில் மண்டபம் என காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெற்றது 

இந்த ஜோதி ஒட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காவல்துறையினர் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.