
தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு தொண்டர் அளித்த புகாரில் நடவடிக்கை!
மதுரையில் கடந்த 21 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் நடைமேடையில் நடந்து வந்த அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற, அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, விஜயின் பாதுகாவலர்கள் குண்டுகட்டாக தூக்கி கீழே வீசினர்.