Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!

Durga Stalin : திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லவிருந்த, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைக்க வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

Share this Video

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். 

அதே நேரம் இந்த பயணத்தில் அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவரை திருச்சி விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை அழைத்து செல்ல வந்த கார், திருச்சி தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

Related Video