Watch : விபத்துக்குள்ளான அரசு பேருந்து! - 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் அரசு பேருந்து விபத்து ஏற்பட்டது 50க்கும் மேற்பட்ட பயணிகளை பால்மராலிஸ் இருந்து குன்னுருக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

First Published Jul 25, 2022, 6:17 PM IST | Last Updated Jul 25, 2022, 6:17 PM IST

குன்னூர் பால்மராலிஸ் பகுதிக்கு சென்று வரும் அரசு பேருந்து இன்று காலை அங்கிருந்து குன்னூர் நோக்கி  வரும்போது காட்டேரி பகுதிக்கு அருகில் ஓட்டுநரின் உடல்நிலை சோர்வு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டது இதில் பயணம் செய்த பயணிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது இதில் பயணம் செய்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதில் தெய்வானை வயது 65 ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் இளங்கோ வயது 54 என்பவர்   சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தகவல் தெரிந்தவுடன் குன்னூர் காவல்துறையினர் மற்றும் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, வட்டாட்சியர் சிவகுமார் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.