ஜெய் பீம்.. ஜெய் பீம்.. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை - போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்!

Armstrong Murder : BSP தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share this Video

சென்னை பெரம்பூரில் வசித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இன்று மாலை இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

அரசியல் தலைவர்கள் பலரும் அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வரும் அதே நேரம், திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த அரசியல் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை அரசு மருத்துவமனையின் முன்பாக, அவரது ஆதரவாளர்கள் "ஜெய் பீம்" என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Video