Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!

Nagapattinam : நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக சுற்றித் திரிவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share this Video

இதை அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098க்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வந்த குழந்தைகள் உதவி மைய அலுவலர்களிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். 

சிறுவனை மீட்டு காப்பகத்திற்கு அதிகாரிகள் கொண்டுசென்று அவனிடம் விசாரணை நடத்தியதில், அந்த சிறுவன் செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதும், தனது பாட்டியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார்.

Related Video