
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களை ஒவ்வொரு முறை வரும் போது வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். ஆனால் எந்த ஒரு பொருளும் கைப்பற்ற படாத நிலையில் அது புரளி என்பது தெரிய வருகிறது.