சாவர்க்கரின் பிறந்தநாள்.. பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வெளியிடும் புதிய புத்தகம் - அவரே வெளியிட்ட வீடியோ!

Freedom Fighter Savarkar : சுதந்திர போராட்ட வீரர் வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 141-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பாரத பிரதமர் மோடி முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Ansgar R  | Published: May 28, 2024, 9:20 PM IST

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தாய்நாட்டின் சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் ஜிக்கு அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள அவரது சிலைக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தான் எழுதி வந்த “வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 

அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்படிருந்த அறைக்கு நேரில் சென்ற எஸ்.ஜி.சூர்யா அவர் எழுதிய “வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை” புத்தகத்தை புகைப்படம் முன்பு வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சாவர்க்கர் சிறையில் பயன்படுத்தி உரை, தட்டு உள்ளிட்ட பொருட்களைப் பார்வையிட்ட அவர், சிறை வளாகத்தில் இருந்த சாவர்க்கர் சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Read More...

Video Top Stories