சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
தந்தை பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், சீமான் தெரிவித்த கருத்துக்கான ஆதாரங்களை நான் வெளியிடத் தயார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சீமான சொன்ன கருத்துக்கான ஆதாரங்களை நான் வெளியிடத் தயார். ஆனால் இந்த விசயத்தை நான் பொதுவெளியில் பேச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.