
அமித்ஷாவிற்கு பதிலாக சந்தான பாரதி! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்! கிண்டலடித்த காங்கிரஸ்!!
இந்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில், அமித் ஷா படத்திற்கு பதிலாக இயக்குநர் சந்தான பாரதி படம் இடம்பெற்றுள்ளதை கார்த்தி சிதம்பரம் கிண்டல் அடித்துள்ளார்.இதனால், அமித் ஷாவையும், சந்தான பாரதியையும் வைத்து ட்ரோல் செய்யும் அளவுக்கு கூட ட்ரெண்டாகி இருக்கிறது.கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக 'சந்தான பாரதி ஃபேன் கிளப்’என குறிப்பிட்டுள்ளார்.