Viral : ஸ்டிக்கர் அரசாங்கத்திற்கு ஸ்டிக்கர்! - செஸ் ஒலிம்பியாட் பேனரில் மோடி ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!
செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாததை குறிப்பிட்ட பாஜகவினர், அதனை ஸ்டிக்கராக ஒட்டி வருகின்றனர்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதன் விழிப்புணர்வு பிரச்சாரமாக தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே உள்ளதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், பாஜகவின்-ஸ்போர்ட்ஸ் பிரிவினர் செஸ் பேனர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டி வருகின்றனர். மற்ற பாஜகவினரும் தமிழகம் முழுவதும் இதுபோல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.