Watch : பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல்! பந்தலூரில் பரபரப்பு!

பந்தலூரில் கடைகளை மூடக்கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் வியாபாரிகள் கடைகள் மீது தாக்குதல் ....
 

Share this Video

நீலகிரி மாவட்டத்தில் இன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் திறந்து வைத்துள்ளனர்.

இதை கண்டித்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் பந்தலூரில் திறந்து வைக்கப்பட்ட கடையின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடை மீது தாக்குதல் நடத்திய பாஜகவினருக்கு வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பந்தலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Video