இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளரணும் அவசியமில்லை! அண்ணாமலை அதிரடி பேச்சு !
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வரவுள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழக பயணம் இதுவாகும். மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். அதிமுக கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.