தமிழக வெற்றிக் கழகத்தை 'லாட்டரி விற்பனைக் கழகம்' என்று மாற்றவேண்டும் – அண்ணாமலை சரமாரி தாக்கு

Velmurugan s  | Published: Mar 29, 2025, 3:00 PM IST

குருவி படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தினார். ‘பீஸ்ட்’ உட்பட விஜய்யின் இன்னொரு படத்தின் தயாரிப்பு மட்டும் அல்ல, விநியோகத்தையும் ரெட் ஜெயின்ட்தான் பார்த்தது. நான் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறேன் . விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் என்பது வெறும் மைக்கை கையில் எடுத்துப் பேசிவிட்டு போவது கிடையாது. களத்தில் நின்று வேலை பார்ப்பது அரசியல். விஜய் நன்றாக இதைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Read More...

Video Top Stories