
சென்னை வரும் பிஎல் சந்தோஷ்.. ஓபிஎஸ்க்கு போனை போட்ட அண்ணாமலை.. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை இணைக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. நாளை சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சென்னை வரவுள்ளார்.