
கடந்த 11 ஆண்டுகளில், மிகப் பெரிய சாதனைகளை புரிந்துள்ளது பாஜக அரசு - அண்ணாமலை பேச்சு !
11 ஆண்டுகளில் நாம் செய்து இருக்கிற முக்கிய சாதனை, 2012 ல் 180 ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டியவர் சதவீதம் 16.25 சதவீதம். 2026 ல் அது பாஜக ஆட்சியில் 2.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ஆனால் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்பட வில்லை. இன்று தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை. மத்திய அரசின் திட்டங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி, நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சி நடத்தி இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து சினிமா தயாரிக்கும் தம்பிகள் அதிகரித்து இருக்கிறார்கள்.அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா முழுவதும் 38 மாவட்டங்களில் நக்சலைட்கள் ஒழிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2026 ல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதுதான் நமது ஒற்றை இலக்கு . என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசினார் .