அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கு; உச்சநீதிமன்றம் காட்டம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கு குறித்து, உச்ச நீதிமன்றம் தற்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கு குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் இணையத்தில் கசிந்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, காவல்துறை மீது கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், காவல் துறை கொடுக்கப்பட்ட விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி மீது சில குற்றம் முன் வைக்கப்பட்ட நிலையில், இதனை கண்டித்து உச்சநீதி மன்றம் காட்டமாக பதிலளித்துள்ளது.