சமூக நலன் கருதி எளிமையாக நடந்து முடிந்த திருமணம்..! வீடியோ

சமூக நலன் கருதி எளிமையாக நடந்து முடிந்த திருமணம்..! வீடியோ

First Published Apr 17, 2020, 12:24 PM IST | Last Updated Apr 17, 2020, 12:24 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணங்களுக்காக சாலையில் உலாவுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.திருமணம், மருத்துவம், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் கூடுவதை தவிர்த்து முக்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்ற மணமகனுக்கும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற மணமகளுக்கும் திருநின்றவூரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முக்கிய உறவினர்களின் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது.எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் முகக்கவசங்கள் அணிந்து திருமணம் செய்துகொண்டனர்.இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் 10 பேரும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் 10 பேரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததோடு, முகக்கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.