
Ajithkumar Case
தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது “சாரி வேண்டாம்… நீதி வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “அஜித்குமார் ஒரு சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனுடன் இணைந்து இவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும், உங்கள் ஆட்சி காலத்தில் 24 நபர்கள் லாக்கப்பில் மரணம் அடைந்துள்ளனர், அவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். சிபிஐ, ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்ததிற்கு பின் உள்ளது அதன் பின் ஒளிந்து கொள்வதற்கு என்ன காரணம், எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து வரும் பதில் சாரி மா மட்டும் தான், திமுக அரசு இப்போது சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது. என்று ஆவேசமாக பேசியுள்ளார் .