
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பது எடப்பாடி முடிவு தான் - KP. ராமலிங்கம் !
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை அவர் தான் முடிவு செய்வார் என்று கூறினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் உறுதியாக உள்ளது வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் முதல்வராக்கிய தீருவோம் என்ற கே பி ராமலிங்கம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் ஆசை உண்டு என்றும் ஒவ்வொரு கட்சியும் அதற்காக தான் உழைக்கிறார்கள் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார் .