
அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை - திருமாவளவன்
எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதே போல்ச் எதிர்க்கட்சிகள் இன்னும் ஓர் அணியாக வடிவம் பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். பா.ஜ.க - அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது.அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. இந்த நொடி வரை தமிழகத்தில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்