
பாஜகவில் இணையும் நடிகை மீனா ?...’’யார் வந்தாலும் வரவேற்போம்’’ - நயினார் நாகேந்திரன் பேட்டி !
நடிகை மீனா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை தான் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை மீனா பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே மீனா பாஜக கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மீனா பதிவு வெளியிட்டிருப்பதாக பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ...ஒரு கட்சி ஜெயிக்கும் நிலையில் இருக்கும் போது அனைவரும் வந்து சேர்ந்துகொள்வார்கள் . தான் நடிகை மீனா குறித்து கேட்ட கேள்விக்கு நாங்கள் யார் வந்தாலும் வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறியுள்ளார் .