முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகம் சார்ந்தது, அரசியல் அல்ல – நடிகை கஸ்தூரி பேட்டி !

Share this Video

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முற்றிலும் ஆன்மீக நிகழ்வாகும் என்றும், இதை அரசியல் விழாவாக பார்ப்பது தவறு என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திமுக முன்னதாக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக இருந்தது என்றும், தற்போதைய மாநாடு மக்களின் பேரெழுச்சியுடன் நடைபெறுவதாகக் கூறினார். இயக்குநர் அமீர் கூறிய மதவாதக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஸ்தூரி, முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் உறுதியாக பிரதிபலிக்கப்படுகிறது. மாற்றுமதத்தினர் தேவையில்லாத சொற்களை தவிர்க்க வேண்டும். சுல்தான்கள் கூட கோவிலுக்கு நற்பணி செய்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை, என கூறினார். முருகன் தமிழ்க்கடவுள் என்றும், அவருடைய மூதாதையர்கள் தமிழர்களே அவர் தமிழனாக ஏற்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நடிகர் விஜய் பிறந்த நாள் குறித்து பேசிய கஸ்தூரி, அவரது பிறந்த நாள் ஒரு இடத்தில் மட்டுமல்ல எங்களது ஒவ்வொரு மனதிலும் கொண்டாடப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல விதிமுறைகளால் அந்த அன்பு குறையாது, என்றார். விஜய் சரியான பாதையில் பயணித்து வருகிறார். வெற்றி என்பது அவருடைய கட்சியின் பெயரிலேயே உள்ளது. அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Related Video