நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!

Actress Gautami : தன்னை ஏமாற்றிய இட தரகர் மற்றும் நிலத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை கௌதமி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் நேரில் புகார் அளித்துள்ளார்.

First Published May 6, 2024, 9:13 PM IST | Last Updated May 6, 2024, 9:13 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கௌதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பிளசிங் அக்ரோ ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள 64 ஏக்கர் நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு அழகப்பன் பவர் எழுதி வாங்கியுள்ளார். 

சம்பந்தப்பட்ட இடத்தை விற்கவோ வாங்கவோ செஃபி அமைப்பு தடை விதித்திருந்த நிலையில், அதனை நடிகை கௌதமியிடம் சொல்லமால் ஏமாற்றி அந்த இடத்தை தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி விற்றதாக குற்றம்சாட்டிய நடிகை கௌதமி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருந்த நிலையில் இன்று மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு  ஆஜராகி விபரங்களை தெரிவித்தார்.