
கொள்கை ஏதும் இன்றி வசனம் பேசும் நடிகர் விஜய் ! கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே பாலகிருஷ்ணன் பேட்டி
கொள்கை ஏதும் இன்றி வசனம் பேசும் நடிகர் விஜய்க்கு, கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது தேர்தலின் போது தெரியும், சினிமாவில் வசனம் பேசுவது போல் பேசுவதை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன் பேட்டி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் கம்யூனிஸ்ட் கட்சி பங்கு பெறாது, காங்கிரஸ் கட்சியுடன் எப்படி நாங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என கேள்வி?