திடீரென முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்த நடிகர் பிரபு - வைரல் வீடியோ !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவரது உருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நடிகர் பிரபு உடனிருந்தார்.

First Published Oct 1, 2022, 4:45 PM IST | Last Updated Oct 1, 2022, 4:46 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் சிவாஜி ரசிகர்கள் அவரது உருவப்படத்தை வைத்து, மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள  நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அங்குள்ள நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கல சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கு வைக்கப்பட்டி சிவாஜி படத்துக்கும் மரியாதை செய்தார். அப்போது நடிகர் சிவாஜி உள்பட அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, நடிகர் திலகம் சிவாஜியின் சிலை மணி மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், தற்போது சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்களும், பல்வேறு அமைப்புகளும் அவருக்கு சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென நடிகர் பிரபு முதல்வர் ஸ்டாலின் காலில் விழ, முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து விட்டார். பின்னர் சிவாஜி குடும்பத்தினர் பலர் முதல்வர் ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி வாங்கினர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories