
3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? ஸ்டாலின் அறிவித்த மடிக்கணினி திட்டம் மாணவர்களின் அறிவு பரிசா? தேர்தல் பரிசா? அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் உரிமை பரிசா? தேர்தல் பரிசா?மக்களுக்காக திட்டங்கள் அல்ல தேர்தலுக்காக தான் அறிவிக்கிறார்கள் தேர்தல் முடிந்த பின் மக்களை ஸ்டாலின் மறந்து விடுவார். மக்கள் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி திமுக அரசு ஊழல் செய்து முறைகேடு . என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு .