Watch : திடீரென உள்ளே நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்.. பரபரப்பு காட்சிகள் - வீடியோ வைரல்

சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

First Published Mar 19, 2023, 2:42 PM IST | Last Updated Mar 19, 2023, 2:42 PM IST

ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்ப கலைக்கூடம் உள்ளது. இந்த சிற்ப கலைக்கூடத்தில் இன்று ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது நாகப்பாம்பை பார்த்த சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அதனை கடித்தது. 

அப்போது நாகப்பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது. இதில் நாகப்பாம்புக்கும் நாய்க்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய் நாகப்பாம்பை கடித்து குதறியது. நீண்ட நேரம் நாகப்பாம்பை நாய் கடித்து குதறியதால் நாகப்பாம்பு அங்கேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தது. நாகப்பாம்பு உயிரிழந்த பின்புதான் அந்த நாய் சமாதானமானது. இதனால் சிற்ப கலைக்கூடத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும் அச்சத்துடன் காணப்பட்டனர்.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

Video Top Stories