அதிர்ச்சி!! தண்ணீர் பாட்டிலில் இறந்த கிடந்த பல்லி.. அதிச்சியடைந்த வாடிக்கையாளர்.. வீடியோ வைரல்

புதுச்சேரியில் திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடை ஊழியரிடம் வாடிக்கையாளர் முறையிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

First Published Oct 15, 2022, 2:52 PM IST | Last Updated Oct 15, 2022, 2:52 PM IST

புதுச்சேரி மாநிலம் ராஜீவ்காந்தி சிக்னல் அருகே உள்ள முருகா திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த ஒருவர் அங்குள்ள கடையில் குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளார்.

அந்த பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஹோட்டல் ஊழியரிடம் இதுக்குறித்து முறையிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க:சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் RTI-ல் வராது.. ஆளுநர் மாளிகை பதில்.

அந்த வீடியோவில்,” குடிநீர் பாட்டிலில் பல்லி இருப்பது கூட தெரியாமல் விற்கிறீர்களே. குடிக்கிற தண்ணீரில் கூட இப்படியா? நீங்கள் இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா..? ஒருவேளை இதை கவனிக்காமல் குடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்” என்று பேசுவது பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில் திரையரங்குகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக சோதனை ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க:மதுரையில் மூன்று நாட்களாக வெளுத்து வாங்கும் மழை.. மகிழ்ச்சியில் தூங்கா நகர மக்கள்..!

Read More...

Video Top Stories